காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது… இராணுவம் தனது மிகப் பெரிய பலத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அறிவிப்பு

காஸா பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாவது:
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தனது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. தங்களிடம் உள்ள பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
‘இந்த தரைவழித் தாக்குதலை, இராணுவம் தனது மிகப் பெரிய பலத்தைப் பயன்படுத்தி நடத்திவருகிறது என்றாா் . இதேவேளை காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்ற இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை இந்த மாதத் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தமையும் நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் தற்போது தீவிர தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது காஸாவை முழுமையாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது

