News

வடக்கில் முகாம்களை மூடுவதையும் வீதிகளை திறப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது..

வடக்கில் முகாம்களை மூடுவதையும் வீதிகளை திறப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.. தற்கொலை செய்துகொள்ளும் பயங்கரவாதிகளை உருவாக்குவது புலம்பெயர் தேசத்திற்கு சிறிய விடயம்..

வடக்கு கிழக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல குறைபாடுகள் காணப்படுவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இடங்களில் முகாம்களை மூடுவது, யாழ்ப்பாணம் பலாலி உயர் பாதுகாப்பு முகாம் ஊடாக வீதிகளை திறப்பது போன்றவற்றை சீருடை அணிந்தவர் என அங்கீகரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இராணுவத்தை முகாம்களுக்குள் அடைத்து வைப்பது ஆபத்தானது எனவும், யாழ்ப்பாணத்தில் பத்து தற்கொலைப் பயங்கரவாதிகளை உருவாக்க முடியாது என கனடா போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்கள் நினைக்க வேண்டாம் எனவும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

அந்த பயங்கரவாதிகள் சஹாராக்கள் போன்று தாக்குதலை நடத்தினால் நூற்றுக்கணக்கான முகாம்களை அமைக்க நேரிடலாம் எனவும் அவ்வாறான நிலை தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Recent Articles

Back to top button