News

உப்பு இல்லை..  நல்லமா? சாமர சம்பத் கேள்வி

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , பதுளை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் நேற்று (19) இரு சரீர பிணைகளுடன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டார்.

இன்று அவர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போது,

நான் சொல்லப் போகும் விடயங்களுக்காக  மீண்டும்  என் மீது வழக்கு போட வாய்ப்பு உள்ளது, ஒருவர் ஒரு விடயத்தை கூறும் போது அதில் உள்ள உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்..

நாங்கள் இருப்பது எதிர்க்கட்சியில்.. எதிர்க் கட்சியில் இருப்பவர்கள் குறைகளை சுட்டிக் காட்டுவார்கள்  .. அனுரகுமாரதிசநாயக்க மற்றும் இருவரும் எதிர்க்கட்சியில் இருந்தபோது இவ்வாறு குறை நிறைகளை சுற்றி காட்டினர்.
அதனால் தான் இன்று ஜனாதிபதியாகியுள்ளார்.

அப்போது ஆணை இரவு மற்றும் மன்னாரில் உப்பு தொழிற்சாலைகள் இருந்தன. அந்த நேரத்தில் உப்பு தட்டுப்பாடு ஏற்படவில்லை.

அந்த காலத்தில் உப்பு இல்லையா? உப்பு இருந்தது . நல்லமா இப்ப? உப்பும் இல்ல ஒன்னும் இல்ல. வரலாற்றில் ஒருபோதும் இலங்கையில் உப்பு இல்லாமல் போகவில்லை. அந்த காலத்தில் உப்பு எடுத்துக்கொண்டு போன தென்னிலங்கை மக்கள் தான் இன்று பதுளை  மொனராகல போன்ற பிரதேசங்களில்  வாழ்கிறார்கள்.

நூவரலிய வெளிமடை போன்ற பிரதேசத்தில் வாழ்பவர்கள் தென்னிலங்கையில் இருந்து சென்று அப்பிரதேசங்களை பிடித்தது உப்புக்கொண்டு போய் தான்.

உப்பு வண்டிகளில் உப்பு எடுத்துக்கொண்டு போய் தான் அவர்கள் அப்பிரதேசங்களில் குடி அமர்ந்தார்கள் .

வரலாற்றில் ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து இதுவரை உப்பு தட்டுபாடு ஏற்படவில்லை.. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு உங்கள் திறமையின்மைதான் காரணம்.  அதனை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்.

சென்ற அரசாங்கமும் திறமையின்மை காரணமாகத்தான் அரகல ஏற்பட்டது. அரகல ஏற்பட்டதால்தான் உங்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் கிடைத்தது இல்லாவிட்டால் கிடைத்திருக்காது. இன்று அவர் மேலும் தெரிவித்தார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button