News

உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 62 வயது சட்டத்தரணி ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது.



சிலாபத்தை சேர்ந்த 62 வயது சட்டத்தரணி ஒருவர், உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவருக்கு பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பாலியல் தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் மெசேஜ் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு, குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பேச்சாளர் SSP புத்திக மனதுங்கவின் கூற்றுப்படி, குறித்த வழக்கறிஞர் சமூக ஊடகங்கள் மூலம் நீதிபதிக்கு பல்வேறு வகையான மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து, நீதிபதியின் புகாரின் பேரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, சந்தேகநபரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

“விசாரணைக் கோப்பு மாகாண சட்டவாக்கறிஞருக்கு அனுப்பப்பட்டது. அவரது உத்தரவின் பேரில், பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டின் கீழ், தண்டனைச் சட்டத்தின் 345ஆவது பிரிவின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனடிப்படையில் சந்தேகநபர் மே 21ஆம் திகதி கைது செய்யப்பட்டார்,” என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button