பொத்துவில் அலியார் தாஜஹான் அதிபர் இலங்கை கல்வியியலாளர் சேவை நியமனத்திற்கு தெரிவு.

2019/2020 இல் தேசிய ரீதியில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் நியமனம் பெறத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த பரீட்சைக்கு தோற்றிய பொத்துவில் MA. தாஜஹான்
SLTES நியமனம் பெற தேர்வாகியுள்ளார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டதாரியான (BA) இவர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி முதுமாணி (MEd), முதுகலைமாணி MA ( Tamil), LLB (Hons), PGDE ஆகிய பட்டங்களை நிறைவு செய்துள்ளார்.
2008.08.01ம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரிக்கு நியமனம் பெற்ற இவர்,தமிழ் கூறும் நல்லுலகில் தேசம் போற்றும் தமிழ் ஆசிரியராக போற்றப்படுகிறார்.
இவர் 2016.05.09ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன்
2022.05.09 முதல் செயற்படும் வண்ணம் அதிபர் சேவை
தரம்-II இற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
பொத்துவில் பிரதேசத்தில் இளம் வயதில் அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட
இவர்,அதிபர் சேவையின் NCFSLM, BPP ஆகிய பயிற்சி நெறிகளை சிறப்பாக முடித்துள்ளதுடன் தொடர்ந்தும் கல்வித் துறையிலும், பாடசாலை பெளதீக வளம், அடைவு மட்ட செயற்பாடுகளிலும் முன்னேற்றுவதற்கு தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார்.
பொத்துவில் செங்காமம் அல்மினா வித்தியாலயத்தில் 06 வருடங்கள் அதிபராக கடமையாற்றி புரட்சிகரமான மாற்றத்தை தோற்றுவித்ததோடு, தற்பொழுது பொத்துவில் மினாறுல் உலூம் வித்தியாலயத்தில் அதிபராக செயற்பட்டு வருகிறார்.
அறிவிப்பாளர்,தொகுப்பாளர்,
ஊடகவியலாளர்,கவிஞர்,
எழுத்தாளர் சமாதான நீதவான் எனப் பன்முக ஆளுமை கொண்ட,எம்.ஏ. தாஜஹான் திகாமடுல்ல மீடியா போரத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியாகியுள்ள இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை 3 ஆம் வகுப்புக்கு நாடளாவிய ரீதியில் 605 பேர் எதிர்வரும் ஜுன் மாதம் 2ம் திகதி நியமனப் பெறவுள்ளனர்.
இவர்களுள் 300 பேர் சிங்கள மொழி மூலமும்,202 பேர் தமிழ் மொழி மூலமும்,103 பேர் ஆங்கில மொழி மூலமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
-ரமீஸ் எம் லெவ்வை

