News
பிச்சை எடுக்காத ஒரு நாட்டை உருவாக்க சஜித் பிரேமதாசவினால் மாத்திரமே முடியும்
பிச்சை எடுக்காத ஒரு நாட்டை உருவாக்க சஜித் பிரேமதாசவினால் மாத்திரமே முடியும் என பாஹியங்கள ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டார்.
மொனாராகலையில் இடம்பெற்ற பிக்கு உபதேச மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
சிங்கள , தமிழ் , முஸ்லிம் , கிருஸ்தவம் என அனைத்து இன மக்களும் ஒன்றினையக்கூடிய மேடை ஐக்கிய மக்கள் சக்தி மேடை என அவர் கூறினார்.
இந்த நாட்டை விட்டு மக்கள் வெளியேறுவதும் மகா சங்கத்தினர் நிர்கதியாகியுள்ளமையுமே நாம் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினை.இதற்கு தீர்வை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்தால் பெற்றுக்கொடுக்க முடியும் என அவர் கூறினார்.