இந்த வெற்றி RCB ரசிகர்களுக்கும், அணிக்கும் முக்கியமானது… கடந்த 18 நீண்ட ஆண்டுகளாக அணியின் வெற்றிக்கு என் அனுபவம், இளமை, என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து இறுதியில் அந்த தருணம் வந்தே விட்டது எனக் கூறி உணர்ச்சி வசப்பட்ட விராத் கோஹ்லி

கடந்த 18 ஆண்டுகளாக எனக்கு இருந்த அனைத்தையும் நான் கொடுத்துள்ளேன். எதுவாக இருந்தாலும் இந்த அணிக்கு நான் விசுவாசமாக இருந்து வருகிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்
ஆர்.சி.பி அணி தங்களது முதல் கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி மனம் திறந்து பேசி உள்ளார். போட்டி முடிந்த பின்பு பேசிய விராட், “இந்த வெற்றி ரசிகர்களுக்கும் அணிக்கும் முக்கியமானது.
கடந்த 18 நீண்ட ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு எனது இளமை, எனது அனுபவத்தை அளித்துள்ளேன்.
ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்ல முயற்சித்தேன். என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துள்ளேன்..
இறுதியாக இந்த தருணம் வந்துவிட்டது. இது ஒரு நம்பமுடியாத உணர்வு. இந்த நாள் என வாழ்வில் வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. கடைசி பந்து வீசப்பட்டவுடன் என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒரு ஐ.பி.எல் கோப்பையை வெல்வது ஒரு அற்புதமான உணர்வு. இந்த அணிக்காக ஏபி டி வில்லியர்ஸ் செய்தது மிகவும் மகத்தானது.
இன்றைய போட்டி தொடங்கும் முன்பு இது எங்களுடையது போலவே உங்களுடையதும் என்று நான் அவரிடம் சொன்னேன்.



