News

இஸ்ரேலின் செயல்கள்,  ஈரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான தெளிவான மீறல் மற்றும் சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை மீறும் செயல் என கட்டார் தெரிவிப்பு

கத்தார் பிரதமர் ஈரான் வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்
கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ர ஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் பக்க நிகழ்வில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை சந்தித்தார்.


ஷேக் முகமது, அப்பாஸ் அராக்சியுடன் “இஸ்ரேல் ஈரான் குடியரசின் பிரதேசத்தின் மீது தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள்” குறித்து விவாதித்தார்.


கத்தார் வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேலின் செயலை “ஈரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான தெளிவான மீறல் மற்றும் சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை மீறும் செயல்” என விவரித்தது.


கத்தார் பிரதமர், “பதற்றங்களைக் குறைப்பது மற்றும் பிணக்குகளைத் தீர்ப்பது” அவசியம் என வலியுறுத்தினார். 

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button