News
ட்ரம்ப்பின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு நெதன்யாகு ஒப்புக்கொண்டு சிறிது நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் சற்றுமுன் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது

ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளைக் கண்டறிந்ததை அடுத்து, வடக்கு இஸ்ரேலில் எச்சரிக்கை சைரன்களை செயல்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இது, நெதன்யாகு, டிரம்பின் போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டதாக கூறிய சில நிமிடங்களுக்குப் பிறகு நடந்துள்ளது.
ஈரான்-இஸ்ரேல் மோதல்: பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்
இரானில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக சமீபத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக தகவல்.
இந்த ஏவுகணை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
தாக்குதலால் உடனடியாக எந்த பாதிப்புகளோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை.
இந்த சம்பவம், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருக்க வேண்டிய நேரத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.



