News

அமெரிக்காவுடன் பிரச்சினைகளை தீர்க்க தயார் என முகமது பின் சல்மானுடனான தொலைபேசி உரையாடலில்  ஈரான் அதிபர் தெரிவிப்பு

அமெரிக்காவுடன் பிரச்சினைகளை தீர்க்க தயார் ; ஈரான் அதிபர்

– சவுதி இளவரசருடன் பேச்சு
டெஹ்ரான்: ஈரான் அதிபர் மசோத் பெசெஷ்கியன், அமெரிக்காவுடனான பிரச்சினைகளை தீர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுடனான தொலைபேசி உரையாடலில், நட்பு நாடுகளின் உதவியை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.


இதற்கிடையில், சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான், கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறும் வளைகுடா ஒத்துழைப்பு மன்ற (ஜிசிசி) நாடுகளின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த மன்றத்தில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.


ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தை திங்கட்கிழமை தாக்கியதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தத் தாக்குதலின் பாதுகாப்பு விளைவுகள் மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.


நன்றி: ஈரானிய அரசு ஊடகம் IRIB

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button