News
கந்தளாய் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் மாயம்: தீவிர தேடுதல் வேட்டை

கந்தளாய் யூசுப்
கந்தளாய் குளத்திலத்துக்கு நேற்று (05) மீன் பிடிக்கச் சென்ற 46 வயதான மது சஞ்ஞய குமார் என்பவர் காணாமல் போயுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87-ம் கட்ட பழுகஸ் கிராமத்தைச் சேர்ந்தவரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான மது சஞ்ஞய குமார், நேற்று மாலை இருவருடன் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அவர்களில் இருவர் மட்டுமே வீடு திரும்பியுள்ளனர்.
காணாமல் போனவர் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், அக்போபுர பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சந்தேகத்தின் பேரில் இருவர் அக்போபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





