Site icon Madawala News

இனந்தெரியாத இருவர் நடத்திய T-56 துப்பாக்கிச் சூடு தவறியதால் தப்பிப்பிழைத்த முச்சக்கரவண்டி சாரதி.

ஹிக்கடுவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்ததாக நேற்று மாலை பதிவாகியுள்ளது. 

T-56 துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கர வண்டி சாரதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கி குறி தவறியதால், முச்சக்கரவண்டி சாரதி தப்பியோடி மறைந்திருந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, துப்பாக்கிதாரிகளும் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவ இடத்தில் டி-56 ரக துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Exit mobile version