News
பஸ் வி*பத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர சந்திக்கு அருகில் சிசு செரிய பேருந்தொன்றுடன் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர் .
ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து , ஸ்ராவஸ்திபுர சந்திக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிசு செரிய பேருந்தின் பின்புறம் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது .
காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.