News
200 பில்லியன் ரூபாய் கடன்பட்டுள்ள இலங்கை மின்சார சபையால் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முடியாதுள்ளதால் மின்சார சபையை ஐந்து நிறுவனங்களாகப் பிரிக்கும் திட்டம் உள்ளதாக ஆளும்கட்சி M.P தெரிவிப்பு

பொதுமக்களுக்கான சலுகைகளை அதிகரிக்கும் வகையில் இலங்கை மின்சார சபையை ஐந்து நிறுவனங்களாகப் பிரிக்கும் திட்டம் இருப்பதாக, தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை தற்போது திறைசேரிக்கு சுமார் 200 பில்லியன் ரூபாய் கடன்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கை மின்சார சபை ஒரே நிறுவனமாக இருப்பது அதன் உற்பத்தித்திறனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



