News

ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்திலிருந்து சுமார் 20 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு உதவித்தொகைகள் கடந்தகால அரசியல்வாதிகளின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கப்பட்டது அம்பலமாகி அதனை மீட்க நடவடிக்கை எடுக்கபட்டது.

ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்திலிருந்து அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு உதவித்தொகை மீட்கப்படுகிறது.

ஏழை மக்களின் வசதிகளுக்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்திலிருந்து, அரசியல்வாதிகளின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட வெளிநாட்டு உதவித்தொகைகளை உடனடியாக மீட்க அரசு தீர்மானித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக விரைவில் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இந்த நிதி மீட்பு தொடர்பாக அரசு ஏற்கனவே சட்டத்துறையிடம் ஆலோசனை கோரியுள்ளது.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து வெளிநாட்டு உதவித்தொகை வழங்குவது, அந்தச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என சட்டத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலத்தில், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 72 பேருக்கு மேல், 20 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு உதவித்தொகைகள் இந்த நிதியத்திலிருந்து வழங்கப்பட்டதாக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக நாடாளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button