தர்கா நகர் அதிகாரிகொடை பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட Adigarigoda Premier League -APL 2024 கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
தர்கா நகர் அதிகாரிகொடை பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது (Adigarigoda Premier League -APL 2024) ஆகஸ்ட் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் தர்கா நகர் சாஹிரா கல்லூரி மைதானத்தில் வெகுவிமர்சையாக நாடாத்தப்பட்டது.
இப்பிரதேசத்தில் உள்ள சிங்களம் ,தமிழ்,முஸ்லிம் வீரர்கள் இன மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக போட்டிகளில் பங்கு பற்றினர்.
இவர்கள் 12 அணிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு அணிக்கு 4 போட்டிகள் வீதம் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன.
இறுதியாக Adigarigoda Falcon அணி வெற்றி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இன மத வேறுபாடு இன்றி சுற்றுப்போட்டியினை வெற்றிகரமாக முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த APL committee அங்கத்துவர்களுக்கும் மற்றும் அனுசரணையாளர்களுக்கும் அதிகாரிகொடை பிரதேசவாசிகள் உள்ளம் கவர்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.