News
எமது அரசாங்கத்தில் ஈஸ்டர் தாக்குதலில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் ; அனுர குமார
தங்களுடைய தேசிய சக்தி அரசாங்கத்தில் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்ககு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து உறுதியளித்ததாக அக்கட்சி தலைவர் அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.
இன்று காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
“இந்த அரசாங்கம் பாதிகப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்காமல் தாக்குதலின் சூத்திரதாரிகளை மறைத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட் அதிகாரிகள் தற்போது எம்மோடு உள்ளார்கள். நாம் எமது அரசில் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என அவர் குறிப்பிட்டார்.