சில வழக்குகளின் நடைமுறையைப் பார்த்து, யார் வேண்டுமானாலும் முன்கூட்டியே கணிப்பு செய்ய முடியும்… அவை சில சமயங்களில் அவை பொருந்தலாம் சில சமயம் பிழை ஆகலாம் ; யூ டியூபர் சுதாவின் கணிப்பு பற்றி அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

**சில வழக்குகளின் போக்கை வைத்து யார் வேண்டுமானாலும் முன்கூட்டியே கணிப்பு செய்யலாம் – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ**
சில வழக்குகளின் நடைமுறையைப் பார்த்து, யார் வேண்டுமானாலும் முன்கூட்டியே கணிப்பு செய்ய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு குறித்து, சுதத் திலகசிரி என்பவர் யூடியூப் ஊடகம் வழியாக முன்கூட்டியே கருத்து தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“இந்த விசாரணை நடைமுறையில் அரசாங்கம் எவ்வித தலையீடும் செய்யவில்லை. இந்த சம்பவம் மட்டுமல்லாமல், நிதி மோசடி, குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் சுதந்திரமாக விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் இடமளித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நாட்டில் எந்தவொரு தரப்பினருக்கும் சட்டம் சமமாக செயல்படுத்தப்படுகிறது என்பதை இந்த சந்தர்ப்பம் காட்டுகிறது. இதற்கு முன்பு விக்டர் ஐவன் என்ற பத்திரிகையாளரும் ஒரு வழக்கின் தீர்ப்பு குறித்து முன்கூட்டியே கருத்து தெரிவித்ததை நான் கவனித்தேன். சில வழக்குகளின் போக்கை வைத்து, யார் வேண்டுமானாலும் முன்கூட்டியே கணிப்பு செய்ய முடியும். சிலர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என நினைக்கலாம், சிலர் ஜாமீன் வழங்கப்படாது என நினைக்கலாம். இவை எல்லாம் ஜோதிடம் போன்றவைதான். சில சமயங்களில் அவை பொருந்தலாம், சில சமயங்களில் தவறாகலாம். யாராவது இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அது நீதிமன்றத்துக்கு அவமதிப்பு எனக் கருதப்படும்,” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



