நாட்டின் ஜனநாயகம் உண்மையிலேயே ஆபத்தில் உள்ளது – சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பழைய JVP பயத்தை மீண்டும் உருவாக்கும் நிலை ஏற்படும் ; நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷே, தேசிய மக்கள் சக்தி (NPP) அமைப்பு மற்ற கட்சிகளுக்கு எதிராக வன்முறையிலும் மிரட்டலிலும் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘x’ தளத்தில் பதிவிட்ட அவர், முன்னாள் jvp உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி (பெரட்டுகாமி) கட்சியின் உறுப்பினர்கள், Npp ஆதரவாளர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறினார்.
நேற்று காலை (செப்டம்பர் 02) பெருமளவிலான Npp உறுப்பினர்கள், பெரட்டுகாமி. அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதனைக் கைப்பற்றியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இத்தகைய செயல்கள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பதாக எச்சரித்த நாமல் ராஜபக்ஷே, NPP உறுதியளித்த புதிய மாற்றம் இதுவாக இருந்தால், நாட்டின் ஜனநாயகம் உண்மையிலேயே ஆபத்தில் உள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பழைய JVP பயத்தை மீண்டும் உருவாக்கும் நிலை ஏற்படும்” என்று தெரிவித்தார்.




ஆம் நிச்சியம் மிகவும ஆபத்தில் இருக்கின்றது. பாதாள கும்மல்களுடன் உனக்கு இருக்கும் தொடர்புகள் அனைத்தும் படிப்படியாக வௌிவந்துகொண்டிருக்கின்றன.மிகவிரைவில் 90 நாட்கள் ஸீஐடி பாதுகாப்பில் உன்னை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் காலம் மிக விரைவாக வந்துகொண்டிருக்கின்றது. அப்போது வசீம் தாஜீதின் கொலை செய்ததுமுதல் அத்தனை கொலைகளும் கொள்ளைகளும் ஒவ்வொன்றாக வௌிவரும் போது சிறையில் ஒரு இடத்தை உனக்கென எழுதிக் கொடுத்து அங்கு நிரந்தரமாக வதிவிடமாக அமைத்துக் கொண்டால் சரி.