News
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 100 மீட்டரை 14.2 விநாடிகளில் ஓடி கந்தளாய் மாணவி இப்திகார் சுல்பா சாதனை

கந்தளாய் யூசுப்
சாதனை படைத்த கந்தளாய் மாணவி
கந்தளாய் ஆயிஷா மகளிர் மகாவித்தியாலய மாணவி இப்திகார் சுல்பா, கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் (14 வயது பிரிவு) சாதனை படைத்து முதலாமிடம் பெற்றுள்ளார்.
இவர் 14.2 விநாடிகளில் இலக்கை அடைந்து, அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளார்.
இந்தச் சாதனையில் பங்காற்றிய உடற்கல்வி ஆசிரியர் கபார்கான், பயிற்றுவிப்பாளர் ஆபித்,
பெற்றோர்கள், பாடசாலை சமூகம் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கின்றனர்.
.


