News
தர்மத்தை பாதுகாப்பவர்களை தர்மம் பாதுகாக்கும் – சிறையில் இருந்த நேரத்தில் சிலரின் தலையை சரி செய்தேன் ; பிணையில் வெளியில் வந்த அதுரலியே ரதன தேரர் தெரிவிப்பு

“தர்மத்தை பாதுகாப்பவர்களை தர்மம் பாதுகாக்கும்,” என்று இன்று பிணையில் வெளியில் வந்த அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
தான் சிறையில் இருந்த நேரத்தைப் படிக்கவும் தியானிக்கவும், உள்ளிருந்த சிலரின் தலையை சரி செய்யவும் பயன்படுத்தியதாகக் கூறினார்.
ஆள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அவருக்கு இன்று நுகேகொடை மாஜிஸ்திரேட்டால் பிணை வழங்கப்பட்டது.



