Site icon Madawala News

விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை ஏற்றிச் சென்ற கார் அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கருகில் விபத்து.

விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை ஏற்றிச் சென்ற அதிசொகுசு காரொன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளானது.

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான அதிசொகுசு காரே இவ்வாறு விபத்துக்கு உள்ளானது.

பத்தேகம அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 80 ஆவது கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 16-21 வயதுடைய இரண்டு மகன்களும் மனைவியும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் போது 21 வயது மகன் காரை ஓட்டி வந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கார் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு தனியார் பேருந்தின் வலது பக்க உடற்பகுதியில் பாதுகாப்பு வேலிக்கு நடுவில் விபத்துக்கு உள்ளாகி மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற அதேநேரம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அம்பியூலன்ஸ் வண்டிகள் வருவதற்கு முன்னர், காரில் சிக்கி காயமடைந்தவர்களை வீதியில் பயணித்த வாகனங்களின் சாரதிகள் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

Exit mobile version