News
மஹிந்தவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு அறிவித்தால் அதனை மதிப்பீடு செய்து பாதுகாப்பு வழங்க முடியும் என அரச தரப்பு தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தயாரென பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு அறிவித்தால், நிலைமைகளை மதிப்பீடு செய்ததன் பின்னர், பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இந்த விடயம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



