News
மஹிந்த ராஜபக்ஷவுக்காக ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதத்தை ஆம்பித்தார்.

தங்காலை, கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனாநாயக்க சிலைக்கு முன்பாக இன்று (08) பிற்பகல் 01.00 மணியளவில் ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது மற்றும் பிற முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மீண்டும் வழங்கக் கோரியும் தேரர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது



