News
நடைபெற இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறுத்தப்பட்டது தொடர்பில் எனக்கு எந்த கவலையும் இல்லை ; ரணில்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பாகத் தாம் கவலை கொள்ளவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மஹரகமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
நான் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி குறித்தே சிந்தித்தேன்.
தேர்தலை நடத்தியிருந்தால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்திருக்க முடியாது.
தற்போது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் தங்களது நிலைப்பாட்டை அதில் வெளிப்படுத்துவார்கள்.
அடுத்ததாக பொதுத் தேர்தலும் பின்னர் மாகாண சபை தேர்தல்களும் இடம்பெறும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.