இன்று முதல் பீடி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பீடி, சுருட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அறிவித்தார்.

பீடிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பீடி, சுருட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் பீடி இலை மற்றும் புகையிலை இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்.ஐ. விமலரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று முதல் குறித்த உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் போலி பீடி உற்பத்தியாளர்கள் இருப்பதாகவும், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்திக் குறைந்த விலையில் பீடிகளைத் தயாரித்து சந்தைக்கு வழங்குவதாகவும் அவர் கூறுகிறார்.
எனினும் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் மாத்திரமே அரசாங்கத்துக்கு முறையாக வரி செலுத்துவதாகவும் எச். ஐ. விமலரத்ன சுட்டிக்காட்டினார்.
புதிய விலைத் திருத்தத்தின்படி 2.5 அங்குல பீடி பொதியின் விலை 6,000 ரூபாயாகவும், 2.5 அங்குல ஒரு பீடியின் விலை 15 ரூபாயாகவும், 2 அங்குல பீடி பொதியின் விலை 5,200 ரூபாயாகவும், 2 அங்குல ஒரு பீடியின் விலை 13 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைகளை விட குறைந்த விலைக்கு பீடிகளை விற்கும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



