15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய காதலனும் அவருக்கு உதவிய தாயாரும் பொலிஸாரால் கைது.
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய காதலனும் அவருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் காதலனின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் காதலனும் அவனது தாயாருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த சிறுமிக்கும் சிறுமியின் தாயாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிறுமி, தனது தாயாரிடம் கூறாமல் வீட்டை விட்டு வெளியே சென்று தனது காதலனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் தாயார் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிறுமியின் காதலனின் வீட்டுக்குச் சென்று சிறுமியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் ஊடாக சந்தேக நபரான காதலன் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விடயம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபரான காதலனும் அவருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் காதலனின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.