News
கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்தினேன் ; ஒப்புக் கொண்ட நிரோஷன் டிக்வெல்ல
தடை விதிக்கப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் நிரோஷன் டிக்வெல்ல கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்தியமையை ஒப்புக் கொண்டுள்ளார்.
தேசிய விளையாட்டு ஒழுக்காற்று குழுவில் அவர் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது.
தாம் கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்தியமையை இந்த விசாரணைகளின் போது அவர் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் அவருக்கு எதிராக விதிக்கப்படவுள்ள தண்டனை தொடர்பில் எதிர்வரும் அறிவிக்கப்படவுள்ளது. காலங்களில்
இந்தமுறை இடம்பெற்ற லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது இலங்கை ஊக்கமருந்து பயன்பாட்டுக்கு எதிரான முகவரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது நிரோஷன் டிக்வெல்ல ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.