News
எமது அரசில் வடக்கு கிழக்கு இணைக்கப்படமாட்டாது,காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது.
தமது அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட மாட்டாது எனவும் பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
சமூக ஊடக வாயிலாக இடம்பெற்ற நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் 8 ஜனாதிபதிகள் பதவி வகித்த போதும் எவராலும் பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என கூறிய அவர் தமது அரசிலும் வடக்கு கிழக்கில் பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படாது என அவர் கூறினார்.