News

சென்னையில் இடம்பெற்ற Unlocking Business potential (வெற்றிகரமான வியாபாரத்திற்கான சந்தைப்படுத்தல் உத்திகள்) சிறப்புச் செயலமர்வில் இலங்கை தொழிலதிபர் இஹ்ஷான் வாஹிட் வளவாளராக சிறப்பித்தார்.

இர்ஷாத் இமாமுதீன்

இந்தியா ரிஃபா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (Rifah Chamber of Commerce & Industry – RCCI) சார்பில், “Unlocking Business Potential – வெற்றிகரமான வியாபாரத்துறையின் சந்தைப்படுத்தல் உத்திகள்” என்ற தலைப்பில் ஒரு சிறப்புச் செயலமர்வு சென்னை அசோகா ஹோட்டலில் வியாழக்கிழமை (29ம் திகதி) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ‘iKING’ நிறுவனத்தின் நிறுவனர், தொழில்முனைவோர், ஃபேஷன் டிசைனர், வியாபாரம் மற்றும் தலைமைத்துவ பயிற்சியாளர், மூலோபாய ஆலோசகர் ஆகிய பல துறைகளில் சிறந்து விளங்கும் இஹ்ஷான் வாஹிட் (MBA) அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் இஹ்ஷான் வாஹிட் அவர்கள், தற்போதைய உலக சந்தை நிலைமைகளில் வெற்றிகரமான வியாபாரம் மேற்கொள்ள தேவையான புதிய சந்தைப்படுத்தல் உத்திகள், வாடிக்கையாளர் மனோபாவத்தைப் புரிந்துகொள்வது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாய்ப்புகள், பிராண்ட் உருவாக்கம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான திறன்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இஹ்ஷான் வாஹிட் அவர்கள், இலங்கையைச் சேர்ந்த தொழில்முனைவோர் என்பதுடன், கடல்கடந்த பல நாடுகளில் தத்தளிக்கும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளை வெற்றிக்கரமாக வழிநடத்திய அனுபவமிக்க நிபுணராக அறியப்படுகிறார். மேலும், அவர் ஒரு சிறந்த சமூக சேவகராகவும் பல சமூக நலத்திட்டங்களில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.

இச்செயலமர்வில் பல்வேறு துறைகளிலிருந்து வந்த தொழில்முனைவோர்கள், வியாபார நிபுணர்கள் மற்றும் இளம் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் வியாபார வளர்ச்சிக்கான புதிய பார்வை மற்றும் வழிகாட்டலைப் பெற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாவது: “வியாபார உலகம் வேகமாக மாறி வரும் இன்றைய சூழலில், இத்தகைய செயலமர்வுகள் தொழில்முனைவோருக்கு தங்கள் திறன்களை மேம்படுத்தி உலகளாவிய போட்டியில் முன்னேற உதவும்” என்று தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button