News
மேல் மாடியிலிருந்து வெற்றிலை எச்சில் துப்ப முயற்சித்த நபர் தவறி விழுந்து உயிரிழந்த சோகம்

யாழ், நீர்வேலி, அச்செழு பகுதியைச் சேர்ந்த ஒருவர் மாடியிலிருந்து வெற்றிலை எச்சிலை துப்ப முயற்சித்த வேளை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி மேல் மாடியில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த குறித்த நபர், வெற்றிலை எச்சிலை துப்புவதற்காக கட்டிடத்தின் முகப்பு பகுதிக்குச் சென்றவேளை கால் தவறி கீழே விழுந்துள்ளார். குறித்த தினத்தில் அதிக மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று (31) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது



