சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ள அவுடிக் காரில் வந்து ரவுடித்தனம் செய்த பெண் தொடர்பான வீடியோவின் முழு விபரம்

வீதிப் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு ஒரு பெண் இடையூறு விளைவிக்கும் வகையிலான வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கம்பஹா, உடுகம்பொல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவே தகவல்கள் பதிவாகியுள்ளன.
போக்குவரத்து மீறலொன்று தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு சட்டத்தை அமுல்படுத்த முற்பட்ட போதே அந்த பெண் கோபமாகவும் ஆத்திரமூட்டும் வகையிலும் நடந்து கொள்ளும் விதம் அதில் காணப்படுகிறது.
அந்த சந்தர்ப்பத்தில் அவர் ஒரு பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு தான் அவரது சகோதரி எனக் கூறி, பொலிஸ் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவரையும் மிரட்டிவிட்டு தப்பிச் செல்லும் போது பொது மகன் ஒருவர் அப்பெண்ணை தப்பிச் செல்ல விடாமல் தடுக்கிறார், இதன்போது அந்தப் பெண் குறிப்பிட்ட நபரையும் மோதி தள்ளிவிட்டு தப்பிச் செல்வது பதிவாகியுள்ளது video 👇



