News
நாளை (ஞாயிறு) மடவளை பஸார் அஷ்ரப் கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ள அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ஒரு குடம் கண்ணீர் நூல் மீளறிமுக நிகழ்வு

ஸ்ரீலங்கா இஸ்லாமிய எழுத்தாளர் அமைப்பின் ஏற்பாட்டில் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ஒரு குடம் கண்ணீர் நூல் வாசிப்பனுபவமும் -மீளறிமுகமும் எதிர்வரும் 02.11.2025 (நாளை) ஞாயிறு அன்று மாலை 3.45க்கு மடவளை மதீனா தேசிய பாடசாலை அஷ்ரப் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். றாஸிக் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கௌரவ. பிரதமரின் மேலதிகச் செயலாளர் ஏ.பி.எம். அஷ்ரப் அவர்கள் பிரதம அதிதியாகவும் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் சிறப்பதிதியாகவும் கலந்து கொள்வார். முதல் பிரதியை மஹஜன நிறுவனப் பணிப்பாளர் திருமதி ரஸ்வி நஸார் பெற்றுக் கொள்வார்.
வாசிப்பனுபவ உரையை கெக்கிராவ சுலைஹா நிகழ்த்த பஸ்மினா அன்ஸார் கவிதைப் பொழிவு நிகழ்த்துவார். ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்துவார்.
முனீரா அபூபக்கர்
01.11.2025



