இந்தியாவில் வறுமையற்றவர்ளை கொண்ட முதல் மாநிலமாக மாறியது கேரளா.

By : Razana Manaf
இந்தியாவில் மொத்தமாக 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் இருக்கிறது.
இவை அத்தனைக்குள்ளும் கேரளாவும், கேரள மக்களும் மிகவும் வித்தியாசனமானவர்கள்.
இந்தியாவில் அதிக கல்வியறிவு கொண்ட மக்கள் கேரள மக்கள், இந்தியாவில் மிகச்சிறந்த அரச வைத்திய சேவை கேரளாவிற்கே சொந்தம், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழும் ஒரு மாநிலம் இந்தியாவில் உண்டென்றால் அது கேரளதான்.
சமூக நலம், எழுச்சி, பெண்கள் தன்னிறைவு என்ற விடயங்களுக்கு இந்தியாவிலேயே கேரளா முன்னுதாரணமான ஒரு மாநிலம் அத்தோடு, ஒரு காலத்தில் கடுமையான சாதிப்பிரிவுகளால் பிரிக்கப்பட்டிருந்த கேரளாவில் சமூக விழிப்பு இயக்கங்களின் எழுச்சி அவைகளை தலைகீழாக மாற்றின.
ஒன்றே ஜாதி, ஒன்றே மதம், ஒன்றே மனிதன் என்ற கொள்கையை அந்த இயக்கங்கள் நாடு முழுவதும் பரப்பின அதனால் இன்று அனைத்து விடயங்களிலும் அங்கு சமத்துவம் பேணப்படுகிறது. சிறு அளவில் மத அரசியல் தாக்கம் இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் மத சகிப்புத்தன்மையுடனும்,ஒற்றுமையுடனும், சகோதர்களாக, உறவுகளாக அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற பல முக்கியமான விடயங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். கேரளா இப்படி முன்னுதாரணமான மாநிலமாக மாற என்ன காரணம்?
🔴 வெரி சிம்பிள் – இந்தியாவில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி கேரளாவில்தான் உருவானது.
கடந்த 68 வருடகால கேரளாவின் ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல் ஆட்சி நடைபெற்றதில்லை, கம்யூனிஸ்ட் கட்சி தனியாகவோ அல்லது காங்கிரஸுடன் சேர்ந்தோதான் ஆட்சி செய்து வந்துள்ளது.
அந்த மாநிலத்தில் கம்யூனிஸ்ட் போட்ட அத்திவாரத்தில் வலுவான கேரளா கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
நாம் நினைப்பது போலல்லாமல் கம்யூனிஸ்ட் ஆட்சி ஒரு நாட்டுக்கு மிகவும் சிறந்த ஆட்சி கம்யூனிஸ்ட் ஆட்சியினால் ஒரு நாடு சமத்துவம், பொருளாதாரம், மக்களின் பங்கேற்பு,கல்வி, சுகாதாரம், தொழிலாளர் உரிமைகள், மதச்சார்பின்மை போன்ற பல விடயங்களில் சிறந்து விளங்கும்.
🔴 கம்யூனிஸ்ட் ஆட்சி என்பது வெறும் அரசியல் அல்ல அது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் சமூகம் நோக்கம் கொண்ட ஆட்சி.
இதை கேரள மக்கள் புரிந்து கொண்ட அளவிற்கு இலங்கை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் துயரமானது.
❤



