சுமார் 150 குடும்பங்களை சேர்ந்தவர்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த பள்ளிவாசலின் (மஸ்ஜிதுல் ஹமத்) கட்டிடப்பணிகளை ஆரம்பித்து வைத்த ஹிஸ்புல்லாஹ்

🕌 மஸ்ஜிதுல் ஹமத் கட்டிட நிர்மாணப் பணி ஆரம்பித்துவைப்பு..!
ஆரையம்பதி பாலமுனை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள புதிய மஸ்ஜிதுல் ஹமத் பள்ளிவாசலின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (2) சுபஹ் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது.
குறிப்பாக, இப்பகுதியில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்களுக்காக கடந்த காலங்களில் தற்காலிகமாக ஒரு பள்ளிவாசல் இயங்கிவந்தது. இதனை கருத்தில் கொண்டு, புதிய பள்ளிவாசலின் நிர்மாணப் பணியை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
பள்ளிவாசல் என்பது சமூக முன்னேற்றத்திற்கான முக்கிய மையமாக திகழ்வதோடு, மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் தளமாகவும் அமைய வேண்டும் என கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இப்பள்ளிவாசலுக்கான காணியை வக்ஃப் செய்த மன்சூர் ஹாஜியார் அவர்களுக்கும், பள்ளிவாசல் உருவாக்கத்தில் பாடுபடும் சைனுதீன் பலாஹி (மதனி) அவர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ். ஹெச். அஸ்பர் JP, மண்மூனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ரபீக், அமைப்பாளர் முபாரக் JP, பள்ளிவாசல் தலைவர், நிர்வாகசபை உறுப்பினர்கள், ஜாமிஉல் ஹசனாத் பள்ளிவாசல் தலைவர் மூரீத், முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
— ஊடகப்பிரிவு









