சீனடிக் கலை போட்டியில் முதலாம் இடத்தை பிடித்து தேசிய மட்டத்தில் சாதனை படைத்த புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு வரவேற்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர்கள் அகில இலங்கை தேசிய மட்ட இஸ்லாமிய கலாசார போட்டி நிகழ்ச்சியில் சீனடிக் கலை போட்டியில முதலாம் இடத்தை பிடித்து தேசிய மட்டத்தில் சாதனையை நிலைநாட்டியுள்ளதுடன் பாடசாலைக்கும் புத்தளத்திற்கும் பெருமை சேர்த்த சாதனை வீரர்களை கௌரவித்தது வரவேற்க்கப்பட்ட நிகழ்வு சனிக்கிழமை (01) இரவு புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது
இவ் வரவேற்பு நிகழ்வில் புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹமட், இப்லால், சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் ஐ.ஏ நஜிம், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
மேற்படி சீனடிக் கலையின் தேசிய மட்ட போட்டிகள் சனிக்கிழமை (01) கொழும்பு சாஹிரா தேசிய கல்லூரியில் இடம்பெற்றது. சீனடிக் கலையில் ஸாஹிரா தேசிய பாடசாலை சார்பில் உயர்தர மாணவர் குழுவினரகளான ஜே.சாஜித் (தலைவர்)… எம்.ஏ.எம் ஆதில், எம்.கே கைஸ், எம்.எச் ஹைதம் காசிம், எம் ஏ எம் அஸ்மத். எஸ்.எம் அர்ஷத், எம் எம் எம் முன்தீர், எம் ஆர் எம் றஹீக் ஆகிய மாணவர்களையும் பயிற்றுவித்து வெற்றி பாதைக்கு வழிகாட்டிய ஆசிரியர் எம்.ஏ.எம். சுபியான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது







