News
கடலில் கைப்பற்றப்பட்ட சுமார் 500 கோடி ரூபாய் பெறுமதியான 350 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கரைக்கு கொண்டுவரப்பட்டது – 6 இலங்கையர்கள் கைது

கடற்படையின் தொலைதூரச் செயல்பாட்டுப் படைப்பிரிவால் ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் கொண்ட மீன்பிடிப் படகு இன்று அதிகாலை வத்தளை, திக்விட்ட மீன்பிடித் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
கடற்படைக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தக் கடற்படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதில் இருந்த 06 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீன்பிடிப் படகு திக்விட்ட மீன்பிடித் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், அதனைப் பார்வையிட வந்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள், இதில் சுமார் 500 கோடி ரூபாய் பெறுமதியான 350 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் 16 பைகளில் பொதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



