மடவளையில் தொடரும் NPP யின் வேலைத் திட்டங்கள்

மடவளை – பிஹில்லதெனிய பிரதேசத்தையும் கொஸ்வத்த பிரதேசத்தையும் இணைக்கும் முக்கியமான பாதை, மக்கள் நிதியுதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்று (05) பிரதேச மக்களின் பயன்பாட்டுக்காக அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பிஹில்லதெனிய மக்களின் நேரடி நிதி பங்களிப்பின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், சமூக ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சாலை கட்டுமானப் பணிக்கான முழு செலவையும் தன்னார்வமாக ஏற்று நிறைவேற்றியவர் கௌரவ பாததும்பரை பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் ரினூஸ் பாருக் அவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய திறப்புவிழாவில் மடவளை ஜாமியுல் ஹைராத் ஜும்மா பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் W. M. நாஜிம், பாததும்பரை பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் ரினூஸ் பாருக், பிஹல்லதெனிய வட்டார கிராம சேவகர் திருமதி R.R.K. அமரசேகர, தேசிய மக்கள் சக்தி மடவளை கிளையின் நிர்வாக உறுப்பினர்கள், மற்றும் பெருந்திரளான பிரதேசவாசிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பல ஆண்டுகளாகப் பழுதடைந்திருந்த இந்தப் பாதை, இன்று புதிய வடிவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவது மகிழ்ச்சிகரமான ஒன்றாகவும். மக்கள் ஒன்றிணைந்து செய்த முயற்சிகளே இத்திட்டத்தை வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்தன.
புனர்நிர்மானம் செய்யப்பட்ட பாதை பிஹில்லதெனிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளுக்கிடையேயான போக்குவரத்து சிரமங்களை தீர்த்து, அப்பகுதி மக்களின் தினசரி வாழ்வில் பெரும் நன்மையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப் பாதையின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.








