பெண்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபாய் வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக சஜித் பிரேமதாச அறிவிப்பு
பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபாய் வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சேருவில நகரில் இன்று (26) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் 16ஆவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டை வங்குரோத்துக்கு உள்ளாக்கிய, தற்போதைய அரசாங்கத்தின் விவேகமற்ற கொள்கைகளால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
தெளிவான வருமான வழிகள் இன்றி, மூன்று வேளை உணவையேனும் பெற்றுக் கொள்ள முடியாத வறிய மக்கள் நாட்டில் உள்ளனர்.
அவர்களுக்காக ஜனசவிய, சமுர்த்தி, அஸ்வெசும, மற்றும் கெமிதிரிய ஆகிய வேலைத்திட்டங்களில் உள்ள சிறந்த விடயங்களை ஒன்றாகச் சேர்த்து, அவற்றின் குறைபாடுகளை நீக்கி, புதிய வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்போம்.
வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஊடாக மாதாந்தம் 20,000 ரூபாய் வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்