ஆரம்பத்தில் போல் இல்லை.. இப்போது என் பொதுக்கூட்டத்திற்கு அதிக மக்கள் வருகிறார்கள் என சரத் பொன்சேக்கா பெருமிதம்
ஊழல் அற்ற ஒழுக்கமான நாட்டை உருவாக்க தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி வேட்பாளரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா , ஊழலற்ற ஒழுக்கமான நாட்டை உருவாக்கும் ஒரே வேட்பாளரான தம்முடன் ஒன்றிணையுமாறு நுவரெலியா மக்கள் தலைமையிலான அனைத்து நாட்டு மக்களையும் அழைக்கிறேன் என்றார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் ஆரம்பத்தை விட தற்போது மக்கள் கூட்டம் படிப்படியாக ஒன்று கூடி வருகின்றது இதற்கு நுவரெலியாவில் இடம்பெற்ற கூட்டமே சிறந்த உதாரணமாகும்.
இன்று நாற்காலிகளில் ஒரு சிலர் உட்கார்ந்து உள்ளனர், ஆனால் இந்த கூட்டத்திற்காக ஏராளமான மக்கள் நின்றபடி காத்திருக்கிறார்கள்.
சஜித் பிரேமதாச ஒரு கோழை, கோட்டாபய நாட்டை விட்டு தப்பிச் சென்ற போது, நாட்டை நாம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினோம்.. ஆனால் அவர் அதனை செய்யவில்லை
ஆம், நுவரெலியா கூட்டத்தில் பல இலட்சம் மக்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. போகும் போக்கில் சரத் பொன்சேகா தான் அடுத்த சனாதிபதி என நம்பும் அளவுக்கு மக்கள் மாறியிருக்கின்றனர். செப்டம்பர் 22 வரை பொறுத்திருந்து பார்ப்போம்.