ஏ.எச்.எம்.பௌசிக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச்.எம்.பௌசிக்கு 10 வருடங்கள் பிற்போடப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) பிறப்பித்துள்ளார்.
ஏ. எச். எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
4 இலட்சம் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிடப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நெதர்லாந்தில் இருந்து வழங்கப்பட்ட Land Cruiser வாகனத்தை மோசடி செய்து அரசாங்கத்திற்கு 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் ஒதுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் ஏ. எச். எம் ஃபௌசி தனது வழக்கறிஞர் மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அங்கு, 62 வருட அரசியல் அனுபவமுள்ள சிரேஷ்ட அரசியல்வாதியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும், ஆனால் அவர் முதல் தடவையாக இலஞ்சம் வாங்கியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டதையும், தற்போது 86 வயதான முதியவர் என்பதையும் கருத்தில் கொண்டு நீதிபதி, அவருக்கு இவ்வாறான தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
ஏ. எச். எம்.பௌசியின் கைரேகைகளைப் பெறவும் நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.