120 மாணவர்கள் தங்கி கல்வி கற்கும் கிண்ணியா ரௌழதுல் ஹாபிழாத் பெண்கள் அரபுக் கல்லூரி வெள்ள அனர்த்தத்தினால் பாரிய அளவில் பாதிப்பு – கல்லூரியை மீட்க உங்கள் உதவி தேவைப்படுகிறது

அவசர உதவி கோரல்
120 மாணவர்கள் தங்கி கல்வி கற்கும் கிண்ணியா ரௌழதுல் ஹாபிழாத் பெண்கள் அரபுக் கல்லூரி நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
பாதிப்புகள்:
கல்லூரியின் பல தளபாடங்கள் (furnitures) மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கல்லூரியின் #தளபாடங்கள், #கணினிகள், #தையல்_இயந்திரம், நூலகம், கல்லூரியின் ஆவணங்கள், கல்லூரியின் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், மாணவிகளின் கற்றல் உபகரணங்கள், இதுபோன்ற பல கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
📢 அவசர உதவி தேவை:
இந்த அனர்த்தத்தில் இருந்து கல்லூரியை மீட்கவும், பாதிக்கப்பட்ட தளபாடங்களைப் புதுப்பிக்கவும், அத்தியாவசிய பொருட்களை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் உடனடி உதவி தேவைப்படுகிறது.
மக்களே, சமூக ஆர்வலர்களே, கொடையாளர்களே!
இந்த இக்கட்டான சூழ்நிலையில், 120 மாணவிகளின் கல்வி மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்த உங்கள் மேலான பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களால் முடிந்த உதவிகளை வழங்க முன்வாருங்கள்!
தொடர்புகளுக்கு :
நிர்வாக சபை
0756060964 / 0778300153 /
0262237315






















