News

குடும்ப பெண் ஒருவரை வேனில் கடத்திச் சென்ற நான்கு இளைஞர்கள் – உடனடியாக களத்தில் இறங்கி விரட்டிச்சென்று பிடித்து காப்பாற்றிய பொலிஸார்

வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதுடன் வேனுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வேன் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பெண்ணின் மாமியார் பெண்ணை தூக்கிச் சென்றவர்களை விரட்டிய போது அவரை உதைந்து விட்டு சென்றுள்ளனர்.

இதன்பின் மாமியார் வவுனியா தலைமைப் பொலிசிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்த  முறைப்பாட்டுக்கு அமைய, தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமந்த தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட், பொலிஸ் சார்ஜன்ட் திலீபன் (61461), பொலிஸ் கொன்தாபிள்களான தயாளன் (91792), ரணில் (81010) கால்கே (9200)  உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த வாகனம் சென்ற பாதையை பின் தொடாந்து சென்ற போது குறித்த வாகனத்தை பளைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதுடன், குறித்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்த வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button