ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்பு…
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு 2 கிராம சேவகர் பிரிவுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, உச்ச பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளருமான ஏ.சீ. சமால்டீன், உச்ச பீட உறுப்பினரும் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சௌபீர், உச்ச பீட உறுப்பினரும் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸீஸ், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம். புஹாத், எஸ். நழீம், சம்மாந்து இளைஞர் அமைப்பாளர் அர்சாத் இஸ்மாயில் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.