News

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் முதல் வேலையாக எரிபொருள் விலையை 150 ரூபாவாக்குவேன்

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் எரிபொருள் விலையை ரூபாவால் குறைப்பதே தனது முதல் கடமை என ஜனாதிபதி வேட்பாளரும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2022 இல் 36 பில்லியன் மோசடி எரிபொருள் இறக்குமதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



2022ஆம் ஆண்டு எரிபொருள் விலையை 200 ரூபாவினால் குறைக்கலாம் என நான் கூறினேன். இப்போது 150 ரூபாவாக குறைக்க முடியும் எனவும் நான் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் மாதத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்துவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button