ஒக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் இ-பார்ஸ்போர்ட்
ஒக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சாதாரண கடவுச்சீட்டுக்கு பதிலாக இ-பாஸ்போர்ட் முறைக்கு மாறுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும், ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் அரசாங்கம் வருந்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், டிஜிட்டல் மயமாக்கலின் விளிம்பில் இருப்பதால், அதைத் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி கூறினார்.
நேற்று (02) இரவு நிபுணத்துவ நிபுணர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை அறிவித்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நிலவிய வரிசைகளை தாம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகவும், இதுவரையில் ஏற்பட்ட கடவுச்சீட்டு வரிசைகளுக்கு தீர்வொன்றை வழங்குவதாகவும் ரணில் விக்கிரமசிங்க இந்த சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.