News
மனைவி வேறொருவருடன் சென்றதால், பொலிஸாருக்கு முன்பாக மரத்தில் ஏறி கணவன் ஆர்ப்பாட்டம்
வேறு ஒருவருடன் ஏற்பட்ட நெருங்கிய உறவின் காரணமாகவே தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதாகக் கூறி ஒருவர் இன்று (03) வவுனியா தலைமையகப் பொலிஸாருக்கு முன்பாக மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொலிஸார் அவரை மரத்திலிருந்து பாதுகாப்பாக கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றத்துடன் குறித்த நபர் மரத்தின் மீது ஏறியதும், மக்கள் ஏராளமானோர் குறித்த இடத்தில் திரண்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றுள்ளதாகவும் அவருடன் சேர்த்து வைக்குமாறு கூறியே இவ்வாறு மரத்தில் ஏறி போராடியிருந்தார்.
நீண்ட நேரமாக அவர் மரத்தில் இருந்து இறங்காமல் இருந்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது.
பின்னர் பொலிசார் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளிற்கிணங்க அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கிச் சென்றிருந்தார்