News
டிரம்ப்பின் தீர்வை வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது – டிரம்ப் நிர்வாகத்திற்கு பாரிய பின்னடைவானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்ட உலகளாவிய வர்த்தக வரிகள் (tariffs), கூட்டாட்சி சட்டத்தை (Federal Law) மீறுவதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பானது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட ஒரு பாரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
குறித்த வர்த்தக வரிகள் விதிப்பானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பொருளாதார நிகழ்ச்சி நிரலின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தமையே இதற்குக் காரணமாகும்.



