News

சுமூகமான முறையில் இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு #தம்பலகாமம்

ஹஸ்பர் ஏ.எச்_

இலங்கையின்  ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (05) காலை 8:30 மணிக்கு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

 தம்பலகாமம்  பிரதேச செயலாளர் திருமதி ஜெ. ஸ்ரீபதி முன்னிலையில் வாக்களிப்புகள் இடம் பெற்றன. 

சுமார் 112  உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்தில் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்திருந்தனர்.

அத்துடன் சமூக நீர்வளங்கள் திணைக்களத்தில் இருந்து ஐந்து பேர் பிரதேச செயலகத்தில் வாக்களித்தனர்.

மொத்தம் 117 தபால் மூல வாக்காளர்கள் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தார்கள்.

கட்சிகளின் முகவர்கள் இவ்வாக்களிப்பு நிலையங்களில் பிரசன்னமாகி வாக்களிப்பை கண்காணித்திருந்தனர்.

வாக்களிப்புகள் எவ்வித குளறுபடியும்  இன்றி  சுமுகமாக இடம்பெற்றன. எதிர்வரும் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button