Site icon Madawala News

அனுர – ரணில் டீல் தெளிவாகி விட்டது,  அனுரவுக்கு போடும் ஓட்டு, திருடர்களை  பாதுகாக்கும் குழுவினருக்கு போடும் ஓட்டாகும்

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி ஆவது தொடர்பில்  ரனில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்திருந்தார்..

இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது..

அனுரகுமார திசாநாயவுக்கு ஓட்டு போட யாராவது நினைத்துக் கொண்டிருந்தால், ஒரு விடயத்தை மறந்து விட வேண்டாம்..  அவருக்குப் போடும் ஓட்டு  திருடர்களை பாதுகாக்கும் குழுவினருக்கு ,
ஒன்றுடன் ஒன்றாக இணைந்து வேலை செய்யும் ஒருவருக்கு போடும் ஓட்டு என்பதை மறந்து விட வேண்டாம்..

அனுரவுக்கு இன்று அரச ஊடகங்களில் அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.. இதிலிருந்து தெளிவாக தெரிகிறது அவர்களுக்கு இடையில் உள்ள  ஒப்பந்தம்.

அவர்கள் ஏன் எங்களுக்கு அவ்வளவு பயப்படுகிறார்கள்..
இந்த நாட்டில் சமகி ஜன பலவேகய  தலைமையில்  220 லட்சம் மக்களின் அரசாங்கம் உருவாவதை அனுர குமார திசாநாயக்கவும் ரனில் விக்கிரமசிங்கமும் நினைத்து பயப்படுகிறார்கள்.
அதனால் தான் இன்று அனுரா ரனில் ஒப்பந்தம் மிகத் தெளிவாக  தெரிய ஆரம்பித்துள்ளது.

இந்த நாட்டு மக்கள் மடையர்கள் என்று நினைத்துக் கொண்டுதான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்

அவர்களின் அரசியல் சதி என்னவென்று அனைவருக்கும் தெரியும்.
அனுரகுமார திசாநாயக்கனியரின் ஏமாற்றுதலுக்கும், மக்களை மடையராக்கும்  நடவடிக்கைகளுக்கும்  யாரும் ஏமாற வேண்டாம்

Exit mobile version